பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
01:07
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் இந்திர தீர்த்த குளம், பொதுமக்களின் நான்கு லட்சம் ரூபாயில், துார் வாரப்படுகிறது.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், 10க்கும் மேற்பட்ட பழமையான குளங்கள் உள்ளன. இதில், நால்வர் கோவில் பேட்டையில் உள்ள இந்திர தீர்த்தம் குளமும் ஒன்று.வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் குப்பை கழிவுகளால், இக்குளம் பராமரிப்பின்றி காணப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் சிலர், மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்து, உரிய அனுமதி பெற்று, குளம் சீரமைப்பு பணியை, நேற்று (ஜூலை., 8ல்) துவக்கினர்.நான்கு லட்சம் ரூபாய் சேகரித்த பொதுமக்கள், குளத்தை, 4 அடி ஆழம் வரை துார்வார உள்ளதாக தெரிவித்தனர்.