பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே விநாயகர், முனியப்பன் கோவில்களில் கும்பாபி ஷேகம் நடந்தது. குமாரபாளையம், வட்டமலையில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்), காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று (ஜூலை., 8ல்),காலை, 9:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே, சாணார்பாளையம் காவிரி ஆற்றங் கரையில் அமைந்துள்ள, மங்கள த்துறை மகா முனியப்பன், மகா சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம் (ஜூலை., 7ல்), துவங்கியது. நேற்று (ஜூலை., 8ல்), காலை, 9:00 மணியளவில் கும்பாபி ஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. பக்தர் களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.