பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம், எளையாம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன், மதுரை வீரன், பொம்மி யம்மாள், வெள்ளையம்மாள், மகா சக்தி காளியம்மன், நவக்கிரகங்கள் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்), கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், பூர்ணாகுதி, சுவாமி சிலை கண் திறப்பு, சுவாமி பிரதிஷ்டை, அம்பிகைக்கு எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஜூலை., 8ல்) அதிகாலை, விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு; காலை, 6:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.