பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
அந்தியூர்: அந்தியூர் அருகே, வேம்பத்தி, மாக்கல்புதூரில் பிரசித்தி பெற்ற, மஹா கணபதி மற்றும் சக்தி மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை., 7ல்) காலை, கலசத்து க்கு புனித நீர் ஊற்றப்பட்டு நடந்தது. மாக்கல் புதூர், முனியப்பன்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
அத்தாணியில்...: அத்தாணி அகிலாண்டநாயகி, அகிலாண்டேஸ்வர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 8ல்) காலை நடந்தது. கோஷ்ட மூர்த்தங்கள், கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அத்தாணி, ஓடைமேடு, குப்பாண்டாபாளையம், செம்புளிச்சாம்பாளையம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.