வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூலை 31 ல் நடக்கும் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சிவகாசி கோட்டாட்சியர் தினகரன் தலைமை வகித்தார். தாசில்தார் சரஸ்வதி உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.