வில்லியனூர்: வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று (ஜூலை., 8ல்) துவங்கியது.வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று (ஜூலை., 8ல்) காலை 10:00 மணியளவில் கொடியேற் றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெறும். வரும் 12ம் தேதி இரவு கருட சேவை, 14ம் தேதி இரவு வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம், 16ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.