காரைக்கால்: காரைக்கால்மேடு பகுதியில் உள்ள சித்தி விநாயகர், ரேணுகாதேவி. பால ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. 6ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மறுநாள் 7ம் தேதி காலை நான்காம் கால பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, அனைத்து விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன். முன்னாள் எம்.பி., ராமதாஸ். முன்னாள் எம்.எல்.ஏ. ஓமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.