திருப்புத்துார்: திருப்புத்துாரில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று மாலை நடராஜர் எழுந்தருளியுள்ள ஆடல் வல்லான் சன்னதியில் ஆனித் திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், பல வண்ண தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் நடராஜரை தரிசித்தனர். தொடர்ந்து சிவகாமி அம்மனுடன் நடராஜர் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். மழை பெய்து நாடு செழிக்க திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டது.