கடலூர்: கடலூர், புதுப்பாளையம் லோகாம்பாள் அம்மன் கோவிலில் 100ம் ஆண்டு ஆடி மாத உற்சவம் வரும் 19ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு அன்று காலை 8:00 மணிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வீதியுலா வருதல், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 9:30 மணிக்கு மகா தீபாராதனை, மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி, 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.