காரைக்கால் சனீஸ்வரர் கோவிலில் தேசிய பிற்பட்டோர் ஆணைய தலைவர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2019 12:07
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் சுவாமி தரிசனம் செய்தார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பகவான் லால்ஷானி, துணைத்தலைவர் லோகேஸ்குமார் ஆகியோர் நேற்று 10ல் ., திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களை கலெக்டர் விக்ரந்தராஜா, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.அதைத் தொடர்ந்து தர்பாரண்யேஸ்வரர், முருகர், வினாயகர், அம்பாள் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியில் சனீஸ்வரர் பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.