பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
12:07
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த க.தொழூர் அய்யனாரப்பன் கோவிலில், இன்று (ஜூலை., 11ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனையொட்டி, நேற்று (ஜூலை., 10ல்) மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், லட்சுமி ஹோமம், முதற்கால பூஜை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (11ம் தேதி) காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 10:30 மணியளவில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.