திருப்புத்தூர் :திருப்புத்தூர் ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் மார்ச் 26ல் மண்டலாபிசேக பூர்த்தியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கடந்த ஜன 30ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜை நடந்து வருகிறது. மார்ச் 23ம் தேதியன்று மாலை குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. மார்ச் 24,25 ம் தேதிகளில் காலை 9மணிக்கும், மாலை 4 மணிக்கும் லட்சார்ச்சனை நடைபெறும். மார்ச் 26ம் தேதியன்று மண்டலாபிஷேகம் பூர்த்தி அடைகிறது. அன்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி மதியம் 12 மணிக்கு பூர்ணாகுதியுடன் நிறைவடையும். இரவு 8 மணிக்கு பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.