பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
திருப்போரூர்:தண்டலம், பெரிய பாளையத்தம்மன் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபி ஷேகம், இன்று (ஜூலை., 15ல்) நடைபெறுகிறது.
திருப்போரூர் அடுத்த, தண்டலம் கிராமத்தில், பழமையான, பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவுடன், பால்குட விழாவும், மாதந்தோறும், பவுர்ணமி விழாவும், வெகு விமரிசை யாக நடைபெறும்.
இந்நிலையில், சிதிலமடைந்து காணப்படும் இக்கோவிலை சீரமைக்க, கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, திருப்பணிகள் முடிக்கப்பட்டு, இன்று (ஜூலை., 15ல்) காலை, 9:30 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி, இன்று(ஜூலை., 15ல்), மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.காலை, 9:00 மணிக்கு, கலசகுடங்கள் புறப்பாடு முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, அன்னதானத்திற்கு, விழா குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர். விழாவை ஒட்டி, நேற்று (ஜூலை., 14ல்) மாலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தன.