எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் 19 ம் தேதி தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2019 02:07
நடுவீரப்பட்டு: பாலூர் அடுத்த எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் வரும் 19 ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.பாலுார் அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி ஸ்ரீபச்சைவாழியம்மன் கோவி லில், வரும்19 ம் தேதி ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 5 ம் தேதி கொடியேற்றப்பட்டது. இன்று (ஜூலை., 16ல்) தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
வரும் 19 ம் தேதி காலை 6:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், மன்னார் சுவாமி, பச்சைவாழியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக் கிறது.காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்ரமணியர் திருக் கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து 11:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சுவாமி க்கு பால் அபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் இதயரசு எத்தி ராஜலு செய்து வருகிறார்.