உத்தரகோசமங்கை:-உத்தரகோசமங்கை அருகே வேளானுாரில் ஊர்காவலர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு எருதுகட்டு விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
பெண்கள் பொங்கலிட்டனர். நேற்று (ஜூலை., 15ல்) பகல் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோயில் முன்புள்ள ஊரணித்திடலில் எருதுகட்டு விழா நடந்தது. 100 அடி நீள பனை மர மட்டையில் உரிக்கப்பட்ட வட கயிற்றை மாட்டின் ஒருமுனையில் கட்டினர். மறுமுனையில் 20 இளைஞர்கள் கயிற்றை பிடித்தபடி மைதானத்தை சுற்றி ஓடினர்.மாடுபிடி வீரர்கள் ஆர்வத் துடன் மாட்டை அடக்கினர். 28 காளை மாடுகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.
விழாவை முன்னிட்டு ஏர்வாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமத்தலை வர்கள் சண்முகவேல், செல்வராஜ் தலைமை வகித்தனர். டாக்டர் அம்பிகா, தலைமையாசிரி யர் கலைச்செல்வி, லீலா, ஊராட்சி செயலர் முருகேசன் உட்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை வேளானுார் கிராம பொதுமக்கள், இளைஞர், மகளிர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.