பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
03:07
நாமக்கல்: காவேட்டிப்பட்டி, மகா மாரியம்மன் வலம்புரி விநாயகர் கோவிலில், நேற்று (ஜூலை., 15ல்) கும்பாபிஷேகம் நடந்தது. நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியில், வலம்புரி விநாயகர், மகா மாரியம்மன், கொங்கலம்மன், பகவதியம்மன், தங்காயி அம்மன் கோவில் உள்ளது.
கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. நேற்று, (ஜூலை., 15ல்) கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு, திருமுறை பாராயணம், நாடி சந்தானம், நான்காம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு, காலை, 6:15 மணிக்கு, வலம்புரி விநாயகர், பகவதி அம்மன், தங்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், காலை, 9:15 மணிக்கு, சித்தி விநாயகர், மகா மாரியம்மன், கொங்கலம்மன் மற்றும் மூலஸ் தானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்தனர்.