பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
03:07
சேலம்: ஆஞ்சநேயர் கோவிலில், ஆனி மூலம் நட்சத்திர, ’ஜேஷ்டாபிஷேகத்தை’ யொட்டி, வெள்ளிக்கவசத்தில் அனுமன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தன்று, ஜேஷ்டாபிஷேகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு ஜேஷ்டா பிஷேகம் என்ற அன்னாபிஷேக விழா நேற்று (ஜூலை., 15ல்) நடந்தது. காலை, 6:00 மணிக்கு மூலவர் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 10:00 மணிக்கு அனுமன் மற்றும் பட்டா பிஷேக ராமர் உற்சவர்களுக்கு சிறப்பு யாகம் செய்து, அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் திருமஞ்சனம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு அனைத்து வகை காய்கறிகள் மற்றும் இனிப்பு, கார வகைகளை அனுமன் முன் படையல் வைத்து, பூஜை செய்து பக்தர்க ளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.மூலவர் அனுமன், சிறப்பு வெள்ளிக்கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.