பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
03:07
தர்மபுரி: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியில் உள்ள, விநாயகர், முருகர், நவக்கிரகம் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 15ல்) நடந்தது. கடந்த, 13ல், காலை, 7:30 மணிக்கு, கொடியேற்றம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கங்கணம் கட்டுதல், கோபுர கலச பந்தன பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்), காலை, 9:00 மணிக்கு, தீர்த்தக்குடம், முளைபாலிகை, கரிகோள ஊர்வலம் நடந்தது.
அன்று மாலை, 5:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று (ஜூலை., 15ல்), காலை, 5:30 மணிக்கு, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, திவ்யாஹூதி ஹோமம், விசேஷ சாந்தி, கண் திறப்பு, மஹா பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு மேல், இக்கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.