ஒரு ஓய்வு நாளில் இயேசு சீடர்களுக்கு போதித்தார். அப்போது கூன் விழுந்து சிரமத்திற்கு ஆளான பெண் ஒருத்தி வந்தாள். இயேசு கை வைத்ததும் அவள் நிமிர்ந்தாள்.
இதை அறிந்த மதத்தலைவர்கள் கோபித்தனர்.“நோயாளிகளைக் குணப்படுத்த வாரத்தில் ஆறு நாள் இருக்கிறதே. ஓய்வுநாளில் தான் மருத்துவம் செய்ய வேண்டுமா?” எனக் கத்தினர்.
“கெட்டவர்களே! ஓய்வு நாள் என்பதற்காக நீங்கள் உங்கள் கழுதைகளை அவிழ்த்து விட்டு தண்ணீர் காட்ட மாட்டீர்களா? அப்படியிருக்கும் போது நோயால் போராடும் இப்பெண் சுகம் பெற வேண்டாமா?” என்றார் இயேசு. மதத்தலைவர்கள் தலை குனிந்தனர்.
பிறகு இயேசு எரிகோ பட்டணம் புறப்பட்டார். வழியில் பார்வையற்ற இருவர்,“ எங்கள் கண்கள் திறக்கும்படி உதவி செய்யும்” என்றனர். இயேசு அவர்களின் கண்களைத் தொட்டதும் பார்வை வந்தது. நல்லதைச் செய்ய நாள் பார்க்க தேவையில்லை.