பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
04:07
* ஜூலை 13, ஆனி 28: நாதமுனிகள் திருநட்சத்திரம், நெல்லை கங்காளநாதர் திருக்காட்சி, திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் சிவன் தேர், திருப்பாதிரிப்புலியூர் சிவன் வீதியுலா, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ஊஞ்சல் உற்ஸவம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.
* ஜூலை 14, ஆனி 29: பிரதோஷ விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி தேர், ராஜபாளையம் மாயூரநாதசுவாமி தேர், சாத்துார் வெங்கடேசர் வீதியுலா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், மதுரை இம்மையில் நன்மை தருவார், அவிநாசியப்பர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், உத்தரகோச மங்கை சிவன் புறப்பாடு.
* ஜூலை 15, ஆனி 30: முகூர்த்த நாள், காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம், குரங்கணி முத்துமாலையம்மன் உற்ஸவம் ஆரம்பம், நெல்லை சிவன் ஆனி மூல தீர்த்தம், மன்னார்குடி ராஜகோபாலர் வெண்ணெய்த்தாழி சேவை, கானாடுகாத்தான் சிவன் தெப்பம், சாத்தூர் வெங்கடேசர் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமஞ்சனம்.
* ஜூலை 16, ஆனி 31: சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம், அருணகிரிநாதர் விழா, அழகர்கோவில் கள்ளழகர் முப்பழ உற்ஸவம், சாத்தூர் வெங்கடேசர் தேர், அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி, மன்னார்குடி ராஜகோபாலர் தெப்பம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி
* ஜூலை 17, ஆடி 1: ஆடி மாதப்பிறப்பு, தட்சிணாயன புண்ணிய காலம், சிவன் கோயில்களில் அயன தீர்த்தம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு
* ஜூலை 18, ஆடி 2: திருவோண விரதம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் பவனி, சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* ஜூலை 19, ஆடி 3: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு, அவிநாசி கருணாம்பிகையம்மன் ஊஞ்சல், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு, திருத்தணி முருகன் கிளிவாகனம்