விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருத்தலம் ஆலம்பாடி. இத்திருத்தலத்தில் சாளக்ராம சொரூபத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார். மூன்று துவாரங்கள் கொண்ட பெரிய சாளக்ராமம் இது. இதன் வழியாகப் பார்த்தால் சங்கும், சக்கரமும் தெரியும். பெருமாளின் திருநாமம் குண்டுசட்டிப் பெருமாள். இங்கு வழங்கப்படும் பிரசாதம் விபூதி. வைணவ கோயிலில் விபூதி வழங்குவது ஆச்சரியம்.