* தினமும் இரண்டு மணி நேரம்மவுனமாகஇருங்கள். *எளிய வாழ்வு, உயரிய சிந்தனை வாழ்வின் லட்சியம் ஆகட்டும். *கருத்தைக் கேளுங்கள். மற்றவர் உணர்வுக்கு மதிப்பு *உண்மை மட்டும் பேசுங்கள். மவுனம் பழகுங்கள். பேச்சில் இனிமை இருக்கட்டும். *உலகையே ஒரு குடும்பமாக கருதி, கிடைத்ததை பிறருக்கும் பங்கிடுங்கள். *எண்ணம், சொல், செயலால் யாருக்கும் துன்பம் தராதீர்கள். *குழந்தை முதல் பெரியவர் வரை தியானம் அவசியம். *தவறு செய்வோர் மீது கோபம் கொள்ளாதீர். பிறரது குற்றம், குறைகளை மன்னிக்கவும், மறக்கவும் பழகுங்கள். *பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி மிக்கவர்கள் தோல்வி கண்டு துவள்வதில்லை. *பிறர் உதவியை நாடாமல் சொந்தக்காலில் நில்லுங்கள். *கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு. உழைப்பால் கிடைத்த பணத்தால் மற்றவருக்கு உதவுங்கள். *உபதேசம் கேட்பதை விட, பயனுள்ள பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. *நியாயமான வழியில் சம்பாதியுங்கள். தவறான வழியில் கிடைக்கும் பணம், பொருளை ஏற்காதீர்கள். - சொல்கிறார் சிவானந்தர்