பரமக்குடி : நயினார்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பக்தர்கள் தவித்தனர்.பரமக்குடி அருகே 12 கி.மீ.,ல்நயினார்கோவில்நாகநாதசுவாமி கோயில் உள்ளது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்ய வருவர்.இங்கு குழந்தைபேறு வேண்டுவோர், பிறந்த குழந்தையை கோயிலில்விட்டு பெற் றோரே ஏலம் எடுப்பதுமுதல்அனைத்து விதமான தோஷ நிவர்த்தி, வீட்டில் சுபகாரியங்கள் நிகழவும் மற்றும் விவசாயிகள்தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை வழங்குவது என பல்வேறுவேண்டுதல்களை வைக்கின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பிரார்த்தனைக்காக பரமக்குடி மற்றும்அருகில் உள்ள கிராம மக்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு சுவாமிதரிசனம் செய்ய செல்வது வழக்கம். ஆடி முதல் வெள்ளியானநேற்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இயற்கை உபாதைகள் செல்லபோதிய வசதிகள் இன்றியும், குடிநீர் கிடைக்காமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே வரும் நாட்களில் இன்னும் அதிகமான பக்தர்கள்கோயிலுக்கு வருவார்கள். பக்தர்கள் மற்றும் பொது மக்களின் சிரமத்தைகருத்தில் கொண்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.