மயிலம் தண்டுமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2019 04:07
மயிலம்: மயிலம் தண்டுமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது.ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று (ஜூலை., 19ல்) காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மயிலம் ரெட்டிக்குளக்கரையில் இருந்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக பூங்கரகம் எடுத்து வந்தனர்.மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களினால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.