செஞ்சி: மேல்பாப்பாம்பாடி அய்யனார் கோவிலில் 22ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறு கிறது. செஞ்சி அடுத்த மேல்பாப்பாம்பாடியில் உள்ள செல்வ கணபதி, பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன், சப்த கன்னிகளுக்கு திருப்பணிகள் செய்து வரும் 22ம் தேதி ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி, நாளை 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும்; இரவு 7:00 மணிக்கு கலச ஸ்தாபனமும், 8:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி பூஜையும், தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் செய்ய உள்ளனர். 22ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜையும், கோ பூஜையும் 9:00 மணிக்கு பிரதான பூஜையும், 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.