கோவளம்: திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத் தில், புனித கார்மேல் மாதா கோவில் உள்ளது.
இங்கு, 211ம் ஆண்டு பெருவிழா, 16ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தேர் பவனி, நேற்று முன்தினம் (ஜூலை., 20ல்) இரவு, 9:00 மணிக்கு, சென்னை, மயிலை உயர்மறை மாவட்ட பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது.முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஐந்து தேர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.