மானாமதுரை : மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சகஸ்ர சண்டீ மகா யாகம் ஜூலை 26ந் தேதி தொடங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறு உள்ளது.
இக் கோயிலில் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ வேண்டி கடந்த 16 ஆண்டுகளாக சகஸ்ர சண்டீ யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சண்டீ யாகம் ஜூலை 26ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி 31 ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது. திருமணத்தடை, குழந்தைச் செல்வம், விவசாயம் செழிக்க, நோய் கஷ்டங்கள் நீங்க, செல்வங்கள் கிடைக்க, நீண்ட ஆயுள் பெற, யாகம் நடத்தப்படுகிறது.
மதுரை, மானாமதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. யாகத்துக்கான ஏற்பாடுகளை மடாலயத்தின் நிர்வாகி ஞானசேகர சுவாமி செய்து வருகிறார்.