பாரசீக கவிஞர் மவுலானா ஜாமியிடம் வினோத பழக்கம் இருந்தது. வீட்டுக்குள் இருக்கும் போது கதவை சாத்திக் கொள்வார். வெளியே சென்றால் கதவு திறந்தே இருக்கும். “வெளியே போகும் போது பூட்ட வேண்டும். நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்களே!” என்றனர் அருகில் வசிப்பவர்கள். “வீட்டில் இருக்கும் பொருள்களில் விலை மதிப்பு மிக்கவன் நானே. மற்ற பொருட்களெல்லாம் பயனற்றவை. இதனால் வீட்டில் இருக்கும் போது கதவை மூடிக் கொள்கிறேன். வெளியே செல்லும் போது திறந்து விடுகிறேன்,” என்றார் மவுலானா.