“மனிதர்கள் செய்யும் எல்லா குற்றங்களுக்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தீயகுணத்திற்கு மட்டும் பரிகாரம் இல்லை” என்கிறார் நபிகள் நாயகம். தொற்று நோய் போன்றது கெட்ட தீயகுணம். ஒரு குணத்தை விட்டால் இன்னொன்று தொற்றும். நம்மிடமுள்ள கெட்ட குணங்களை அடையாளம் தெரிந்து தூக்கி எறிய வேண்டும். மனதில் இவற்றை உள்ளடக்கிக் கொண்டு தொழுகை செய்தால் பலன் ஏதும் கிடைக்காது.