பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
குளித்தலை: குளித்தலை அருகே, முனியப்பன், கருப்பசாமி கோவிலில், ஆடி மாத சிறப்பு பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி அருகே, ஊத்துப்பட்டி முனியப்பன் கோவிலில், கருப்பசாமி, கன்னிமார், பாம்பலம்மன் சுவாமிகளுக்கு, ஆடி மாத சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (ஜூலை., 22ல்), பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்றிரவு (ஜூலை., 23ல்) சுவாமிக்கு உணவு படையலிட்டு பூஜை நடந்தது.
அதில், பக்தர்களுக்கு அருள்வாக்கு அளிக்கப்பட்டது. இதில், கரூர், திருச்சி, திண்டுக்கல், பெரம் பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.