நெல்லையப்பர் கோயிலில் 27ல் பங்குனித்திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2012 10:03
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் பங்குனித்திருவிழா 27ம்தேதி துவங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா 27ம்தேதி காலை 7 மணிக்கு சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. நான்காம் திருநாள் 30ம்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடக்கிறது. 10ம்திருநாள் ஏப்ரல் 5ம்தேதி மாலை 6.50 மணிக்கு மேல் 7.20 மணி வரை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடக்கிறது. விழாவில் கோயில் அலுவலர்கள் செங்கோல், சுவாமி திருபாதம் சுமந்து சுவாமி, அம்பாளை சுற்றி வந்து செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், பணியாளர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.