பழநி, :பழநி முருகன் கோயிலில் ஆறு கால பூஜையின்போது செல்லும் பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ஆறுகால பூஜையில் சுவாமி அபிேஷகம், பூஜைகளை 40 நிமிடம் வரை பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்கின்றனர். அந்நேரத்திலும் சிலர் அலைபேசி பயன்படுத்துகின்றனர். இதனால் பிறபக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதனை முற்றிலும் தவிர்க்க ஆறுகாலபூஜையில் பங்கேற்கும் பக்தர்களிடம் மட்டும் அலைபேசிகளை பெற்று டோக்கன் வழங்கப்படுகிறது. பூஜைகள் முடிந்ததும் பக்தர்கள் அலைபேசிகளை பெற்றுக்கொள்ளலாம்.