மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 12:07
தேனி : தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம், வளையல் திருவிழா, ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
பின்னர் தட்சணாமூர்த்திக்கு பூஜை, சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந் தது.விழாவில் உறவின்முறை தலைவர் முருகன், பொது செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சந்திரசேகரன், இணைச்செயலாளர்கள் தாளமுத்து, பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர். கோயிலில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று ஆடி வெள்ளி, கார்த்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆக.3ல் அம்மனுக்கு வளைகாப்பு, வளையல் திருவிழா நடக்கிறது.