பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
02:07
புதுச்சேரி:வினோபா நகர் முத்து மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நேற்று (ஜூன்., 25ல்) நடந்தது.
வினோபா நகர், முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா, நேற்று முன்தினம் (ஜூன்., 24ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஜூன்., 25ல்) காலை, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக, துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பால் குடங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மாலையில், விளக்கு பூஜை நடந்தது.இன்று (ஜூன்., 26ல்) காலை 6:00 மணிக்கு, பொய்யாக்குளம் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலா, மதியம் 12:30 மணியளவில் சாகை வார்த்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் படைத்தல், அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை (ஜூன்., 27ல்) மாலை 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.