ஈரோடு: நாக பஞ்சமியை முன்னிட்டு, ஆக.,4ல், முனியப்பசாமி கோவிலில் யாக பூஜை நடக் கிறது. ஈரோடு, சூரம்பட்டி முனியப்ப சாமி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு ஆக.,4 ல் மதியம். 12:00 மணிக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 4:00 மணிக்கு அபிஷேகம், யாக பூஜை நடக்கிறது. 5ல் காலை, 8:00 மணி முதல் அபிஷேகம், 11:00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. திருமண தடை, பிரிந்த தம்பதியினர் ஒன்று கூட, கல்வி அபிவிருத்தி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நாக பஞ்சமியில் தோஷம் விலக பூஜை செய்ய தடை நீங்கும் என்பது ஐதீகம்.