பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
03:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பால் காவடி ஊர்வலம் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, காலை 9:30 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்து வலம் வந்தனர். வேண்டுதல் உள்ள பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், சுப்பிரமணியர் ஆவாகனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, கடம் புறப்பாடாகி, வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு பால்குட அபிஷேகம், கலசாபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.