மானாமதுரையில் ஆக.7ல் வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 03:07
மானாமதுரை : மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வீரஅழகர்கோயில் ஆடிபிரம்மோற்ஸவ விழா வரும் 7ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கு கிறது.இக்கோயிலில் ஆடியில் தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்ஸவ விழா நடைபெறுவது வழக்கம், இந்தாண்டுக்கான விழா வரும் 7ந் தேதி காலை 6:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா நாட்களில் சுவாமி ஹனுமார், கருடன், சேஷ, குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெறும்.முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வரும்12 ந் தேதி இரவு 7:00 மணிக்கும், தேரோட்டம் வரும் 15 ந் தேதி 6:00 மணிக்கும், தீர்த்தவாரி 16 ந் தேதியும் நடைபெற உள்ளது. 18ந் தேதி உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.