புதுச்சத்திரம் வேளங்கிப்பட்டு துர்கையம்மன் கோவில் செடல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 03:07
புதுச்சத்திரம்,:வேளங்கிப்பட்டு துர்கையம்மன் கோவில் செடல் உற்சவம், துவங்கியது.விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை 27 ம் தேதி தெரு வடைச்சான், 28ம் தேதி முத்து ஓடம், 29ம் தேதி யாளி வாகனம், 30ம் தேதி முத்துபல்லக்கில் வீதி உலா நடக்கிறது.செடல் உற்சவம் வரும் 31ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 1.00 மணிக்கு காத்த வராயன் கழுமரம் ஏறுதல், மாலை 5.00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்கின்றனர்.