கடலுார் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 03:07
கடலுார்:கடலுார் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று (ஜூலை., 25ல்) அதிகாலை 4:00 மணிக்கு கரகம் வீதியுலா வந்து 4:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி செடல் உற்சவம், இரவு 7:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது.வரும் 3ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, மேலாளர் ஆழ்வார், எழுத்தர் முருகானந்தம் செய்து வருகின்றனர்.