பழநியில் 17 ம் நூற்றாண்டு நினைவுக்கல் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2012 11:03
பழநி :பழநியில் 17 ஆம் நூற்றாண்டு நினைவுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநி காரமடை தோட்டத்தில் சேரகுல வேளாளர்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்திய போது மண்ணுக்குள் புதைந்திருந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பேராசிரியர் வைரவேல் மற்றும் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஒற்றைக்கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பம், நினைவுக்கல் வகை யை சேர்ந்தது. அரசனும், அரசியும் நின்ற நிலையில் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு இருவரும் ஏதோ தானம் அல்லது கோயில் திருப்பணி செய்து, அதன் நினைவாக இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம், என ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலையில் உள்ள அரசனின் மகுடம் நாயக்க மன்னர்களுக்கு உரிய மகுடமாக காட்டப்பட்டுள்ளது. அரசிக்கு இடது புறம் கொண்டை காட்டப்பட்டுள்ளது. இரண்டு பேரும் காதணிகளும், கழுத்து அணிகளும் அணிந்துள்ளனர்.