”உங்களில் எவருக்கேனும் இறைவன் செல்வத்தை வழங்கினால், அவர் முதலில் தனக்கும், பின் தன் மனைவி, மக்களுக்கும் செலவு செய்யட்டும்” என்கிறார் நபிகள். ஒருவேளை, ஒருவர் குடும்பத்தினருக்கு செலவழிக்கத் தயங்கினால் கணவரின் பணத்தில் தேவையானதை எடுக்கும் உரிமை மனைவிக்கு உண்டு. அபூசுப்யான் என்பவரின் மனைவியான ஹிந்தா என்பவர் ஒருமுறை நாயகத்தைக் காண வந்தார். ”அல்லாவின் தூதரே! என் கணவர் கஞ்சத்தனம் செய்கிறார். போதுமான பணம் கொடுப்பதில்லை அவருக்குத் தெரியாமல், நான் அவரின் பணத்தை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று வருந்தினார். ” தேவைக்கு ஏற்ப நியாயமான அளவு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்” என்றார் நாயகம். இதன் மூலம் வீட்டுச் செலவுக்கு பணம் தர வேண்டியது கணவரின் கடமை. இனியாவது குடும்பச் செலவுக்கு போதுமான அளவு பணம் கொடுங்கள்.