பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பது பற்றி நபிகள் சொல்வதைக் கேளுங்கள். ”தேவை போக மீதியுள்ள பொருளைச் செலவழித்து விடு. இதை உனக்கென வைத்துக் கொண்டால் தீமை தான் ஏற்படும். யாருக்கு செலவழிக்க கடமைப்பட்டுள்ளாயோ, அவர்களுக்கு செலவழிப் பாயாக!” என்றார். அதாவது எந்த உறவினருக்கு செலவழிக்க ஒருவன் கடமைப்பட்டிருக்கிறானோ, அவரே அந்தப் பொருளுக்கு அதிக உரிமையுடையவர். ’நீ செலவழி; உனக்காக நான் செலவழிப்பேன்” இதை மனதில் கொண்டு நன்மை தேடிக் கொள்ள வேண்டும்.