பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
02:07
திருப்பூர்:திருப்பூரின் காவல் தெய்வம் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவிலில், 13ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா நேற்று (ஜூலை., 30ல்) கோலாகலமாக நடந்தது.
தொடர்ந்து, 10 நாட்களாக நடக்கும் விழாவில், 26ம் தேதி டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 27ல், தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 28ல் பால்குட ஊர்வலமும் நடந்தது.நேற்று முன்தினம் (ஜூலை., 29ல்), குண்டம் திறக்கும் நிகழ்ச் சியும், பரிவாரமூர்த்திகள் அபிஷேகம், அம்மை அழைத்தல், திருக்கல்யாண நிகழ்ச் சிகளும், குண்டத்தில் அக்னி வார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று (ஜூலை., 30ல்), காலை, 6:00 மணிக்கு, செல்லாண்டியம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பக்தர்கள் பயபக்தியுடன் குண்டம் இறங்கினர்.
காலை, 11:00 மணிக்கு, அக்னி அபிஷேகமும், பொங்கல் படையல் வழிபாடும் நடந்தது. மதியம், 12:00 மணி முதல் அன்னதானமும், மாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் ஊர்வலமும் நடந்தது.இன்று (ஜூலை., 31ல்), அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடி இறுக்குதல், மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு அலங்கார பூஜைகளும், நாளை (ஆகஸ்ட்., 1ல்)மறுபூஜையும் நடக்க உள்ளது.