திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தில் அமைந்துள்ள மழைதரும் முத்துமாரியம் மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முன்னதாக நடந்த அக்னி சட்டி ஊர்வலத்தில் பக்தர்கள் தீ சட்டி ஏந்தி சென்றனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.