மரக்காணம் அடுத்த சிறுவாடி காளியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2019 03:07
மரக்காணம் : மரக்காணம் அடுத்த சிறுவாடி காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. கடந்த 28ம் தேதி பெண்கள் பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 30ம் தேதி காலை பூங்கரகம் வீதியுலாவும், தொடர்ந்து காளியம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது.மதியம் முக்கிய வீதிகள் வழியாக காளியம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கூழ்வார்த்தலும், மயானக் கொள்ளை, காளி முறம் ஏந்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.