பதிவு செய்த நாள்
01
ஆக
2019
02:08
பேரூர்:பேரூர் நொய்யல் படித்துறையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை தினமான நேற்று (ஜூலை., 31ல்), பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர், ஏழை எளியோருக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர்.தொடர்ந்து, பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், குழாய்கள் அமைத்து தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.