பதிவு செய்த நாள்
02
ஆக
2019
12:08
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. , காலை அம்மனுக்கு விசஷே திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.ஆடி அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஊஞ்சல் மண்டபம் முன் கடும் நெரிசல் ஏற்பட்டதால், ஊஞ்சல் தாலாட்டு 30 நிமிடம் முன்னதாக இரவு11:00 மணிக்கு துவங்கினர். ஊஞ்சல் தாலாட்டில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் செல்வம் மற்றும் அறங்காவலர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, வேலுார், கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.