பதிவு செய்த நாள்
02
ஆக
2019
02:08
விழுப்புரம்: விழுப்புரத்தில் அழிந்து வரும் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க, முதல்வர் அறிவித்த நுாற்றாண்டு விழா வளர்ச்சி நிதியில் ஒரு கோடி ரூபாயை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே, ஆதிவாலீஸ்வரர் கோவில் அருகே 2 ஏக்கர் அளவில் குளம் இருந்தது. இந்த குளம் விழுப்புரம் நகரின் மையப் பகுதியின் பெரும் நீர் ஆதாரமாக இருந்து வந்தது.இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும்போது அருகில் உள்ள வீடுகளின் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர் ஊற்றுகள் அதிகமாக இருந்தன. இங்கு குறைந்த அளவு ஆழத்தில் போர்வெல் அமைத்தாலே அதிகளவில் தண்ணீர் கிடைத்தது.
ஆனால், இக்குளம் கடந்த பல ஆண்டுகளாக குப்பை மற்றும் கட்டட இடிபாடு கழிவுகள் கொட் டும் இடமாக மாறி விட்டது. மிகப்பெரிய குளமாக இருந்தது, தற்போது குட்டையைவிட சிறிய அளவில் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால், நாளடைவில் இங்கு குளம் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.குளம் மறைந்து வருவதால், மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அதன் சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனது. நகரின் நீர் ஆதாரத் தை பாதுகாக்க இக்குளத்தை துார்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நுாற்றாண்டு விழா காணும் விழுப்புரம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, சட்ட சபையில், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அந்த நிதியில் விழுப்புரம் நகராட்சியில் சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில், ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி, ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.அதன்படி, இந்த குளத்தின் பழைய அளவிற்கு, துார்வாரப்பட உள்ளது.
இதில் கரை அமைத்து, படிக்கட்டுகள் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மேலும், குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர், மின் விளக்கு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்ய ப்பட உள்ளது.இதன் மூலம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் மீண்டும், புதுப்பொலிவு பெறுவ தோடு, மழைநீர் சேமிக்கப்பட்டு அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.குளங்களை மீட்க வேண்டும்விழுப்புரம் நகராட்சி எல்லையில், கே.கே., ரோடு, திரு.வி.க., சாலை, சந்தனகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற் பட்ட குளங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக, ஆக்கிரமிப்பில் சிக்கி குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது. நகராட்சி பதிவேட்டை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.