சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மழை வேண்டி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2019 02:08
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் நாராயணன், முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி, பிராமணர் சங்கத் தலைவர் வேங்கடநாராயணன், பொருளாளர் கணபதி, அரிமா சங்கத் தலைவர் வேலு, மாவட்ட தலைவர் ஜனனி முன்னிலை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.மன்ற பூசகர் சிவஞான அடிகள், சிவனடிமை செல்வம் முன்னிலையில் அகவல் படித்து மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.நிகழ்ச்சியில் ஜெய்பிரதர்ஸ் கபடி சங்க தலைவர் விஜயகுமார், தலைமை ஆசிரியர்கள் லட்சுமிபதி, செல்வராஜ், வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, இன்னர்வீல் சங்க தலைவர் சுபாஷினி தாமரைச்செல்வன், தீபா சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.