திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலின், இரண்டாம் ஆண்டு தேர்த்திருவிழா இன்று 2ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 9:00 மணியளவில் புதிய திருத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு அவரோஹனம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.